உலக கோப்பை கால்பந்து போட்டியில் 48 நாடுகள் விளையாடலாம்!

Wednesday, January 11th, 2017
ஃபிஃபா என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து அமைப்பு, உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தற்போதைய எண்ணிக்கையான 32 என்பதனை 48-ஆக மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் 2026 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக அணிகளை பங்கேற்க செய்யும் விதமாக 16 குழுக்கள் செயல்படும். ஒவ்வொரு குழுவிலும் மூன்று அணிகள் இடம்பெறும்.

இக்குழுக்களில் நடக்கும் போட்டிகளில் முதல் இரண்டு இடம் பெறும் அணிகள் நாக்அவுட் (வெளியேற்றத்தை முடிவு செய்யும் சுற்று) சுற்றுக்கு தகுதி பெறும். நாக்அவுட் சுற்றில் 32 நாடுகள் விளையாடும். ஆனால், இந்த புதிய வடிவ உலக கோப்பை அட்டவணையின்படி ஃபிஃபா உலக கோப்பை வெற்றியாளர்கள் தற்போதுள்ள எண்ணிக்கையை விட கூடுதல் போட்டிகளில் விளையாட தேவைப்படாது.

இது குறித்த முழு தகவல்களையும் ஃபிஃபா பின்னர் வெளியிடும். ஆனால், ஃபிஃபா உலக கோப்பை அணிகள் பட்டியலில் உருவாக்கப்படும் கூடுதல் இடங்கள் பெரும்பாலும் ஆசிய மற்றும் ஆப்ரிக்கா நாடுகளுக்கே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

_93342936_fifa-world-cup-official-films-bbc



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106