பருத்தித்துறை – கட்டைக்காடு பேருந்து சேவை நேர மாற்றம்!
Monday, January 9th, 2017
பருத்தித்துறையில் இருந்து கட்டைக்காட்டுக்கான மாலை நேர பேருந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாலை 6மணிக்கு மாற்றப்பட்டதாக இ.போ.சபையின் பருத்தித்துறைச்சாலை முகாமையாளர் கே.கந்தசாமி அறிவித்துள்ளார்.
வடமாராட்சி கிழக்கு பிரதேச பயணிகள் விடுத்த கோரிக்கையை அடுத்தே, இந்த நேரமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் நேரம் காலை 7.30 மணியாக மாற்றப்பட்டது. பருத்தித்துறை – கட்டைக்காடு பேருந்து சேவையின் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் பருத்தித்துறை – கட்டைக்காடு பேருந்து சேவையின் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் பருத்தித்துறை – கட்டைக்காடு இறுதிநேர பேருந்து மாலை 4.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.
வடமாராட்சி கிழக்குப் பிரதேசத்திலிருந்து பருத்தி;துறை, யாழ்ப்பாணம், வலிகாமம் போன்ற பிரதேசங்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் சென்று வருவோர் வீடு செல்ல போக்குவரத்து வசதிகளின்றி பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலை தொடர்பில் பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது. நேர அட்டவணை மாற்றப்படுவதற்கு முன்னர் இருந்நது போல கடந்த வெள்ளிக்கிழமை முதல் இறுதி நேர பேருந்து மாலை 6 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பருத்தித்துறைச் சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106