பிரதமர் தலைமையில் கட்சி தலைவர்கள் சந்திப்பு!
Monday, January 9th, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
எல்லை நிர்ணய மேன்முறையீட்டு ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கையில், ஒரு உறுப்பினர் இதுவரை கையெழுத்திடவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட ஏ.எஸ்.எம்.மிஸ்பாவே இவ்வாறு கையெழுத்திடவில்லை எனவும், அவர் குறித்த அறிக்கையை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், அவரது கையெழுத்து இன்றியே, அந்த அறிக்கையை நாளை சமர்ப்பிக்கவுள்ளதாக அக் குழுவின் தலைவர் அஷோக பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், ஒரு உறுப்பினரேனும் கையெழுத்திடாதிருந்தால் அந்த அறிக்கையை ஏற்க முடியாது என, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106