நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் சீனாவில் அறிமுகமாகிறது!

Monday, January 9th, 2017

சீனாவில் நோக்கிய நிறுவனம் தனது முதல் பிரத்தியேக ஸ்மார்ட் போனை வெளியிட உள்ளது. உள்ளூர் இணைய பெரு நிறுவனமான ஜேடி.காம் உடன் இணைந்து நோக்கிய இந்த ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய உள்ளது.

இந்த கைப்பேசியின் உயர்தர வடிவமைப்பு காரணமாக உள்ளூர் சந்தையில் கவனத்தை பெறும் என்று நோக்கிய 6 ஸ்மார்ட் போனை உருவாக்கிய குழுவானது நம்பிக்கை தெரிவித்துள்ளது.லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் சி இ எஸ் எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சியின் இறுதிநாளில் இந்த அறிவிப்பு வெளியானது.

இந்த கண்காட்சியில் பிற நிறுவனங்களின் புதிய போன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.நோக்கியா நிறுவனமானது தன்னுடைய பெயரில் தற்போது போன்களை உற்பத்தி செய்வதில்லை. அதற்கு மாறாக, தன்னுடைய பிராண்டை மற்றோரு பின்லாந்து நிறுவனமான எச் எம் டி குளோபல் பயன்படுத்த உரிமம் அளித்துள்ளது.

தற்போது வரை, இந்த ஒப்பந்தத்தின்படி வெளியாகும் இந்த ஸ்மார்ட் போன்கள் அடிப்படை தொலைப்பேரி அம்சங்களை காட்டிலும் கூடுதல் அம்சங்கள் அதிகமாகவே உள்ளது.

தொடர்ந்து விண்டோஸ் மாடல் போன்களை வெளியிட்டதை ஸ்மார்ட் போன் சந்தையில் நோக்கியா திரும்ப கால்பதிக்க உள்ளதால் இந்த ஸ்மார்ட் போன் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

_93313836_a8c20544-7b43-467e-93cb-1e3b51242ca4



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106