விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு – புளோரிடா ஐவர் பலி!

Sunday, January 8th, 2017

புளோரிடா மாகாணத்தில் உள்ள லவுடெர்டேலே விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் நுழைந்து திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 பேர் பலியானதாக வெளிநாட்டடு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

துப்பாக்கி சூட்டுச் சத்தம் கேட்டதும் விமான நிலையத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பதற்றத்துடன் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

.
இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இன்னும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பலர் காயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர், பயணி ஒருவரை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடைபெற்ற விமான நிலையத்திற்கு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன. விமான நிலையத்தில் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் 20 வயதுமிக்க இளைஞர் எனவும் ஸ்டார் வார்ஸ் டி-சார்ட் அணிந்து இருந்தார் எனவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், துப்பாக்கி குண்டுகளை மீண்டும் நிரப்ப முயன்ற போது அவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

612194762shoot-2



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106