குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ளவும் யாழ்.அரச அதிபர் கோரிக்கை!

Sunday, January 8th, 2017

யாழில் இம்முறை குடிநீர் விநியோகம் அதிகளவு மேற்கொள்ளவிருப்பதால் குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ள விவசாயிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்ட விவசாயக்குழு கூட்டம் நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமக்கு நிலத்தடி நீர்வளமே நீர் ஆதாரம், இம்முறை பருவமழை பெய்ததன் காரணமாக எதிர்வரும் மார்ச் மாதம் குடிநீர் விநியோகம் செய்யும் நிலை ஏற்படலாம். எனவே விவசாயத்திற்கு பயன்படுமாயின் அளவையும் குறைக்க வேண்டியுள்ளமையினால் அதற்கேற்ற பயிர்களை பயிரிட வேண்டியுள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கைகளுக்கு தமது பங்களிப்பினை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

20160417_greens



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106