போக்குவரத்து சபை பேருந்துகளை மீது கல்வீச்சு!
Saturday, January 7th, 2017
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கல்முனை போக்குவரத்து சபை சாலைக்கு சொந்தமான பேருந்து மீது கட்டப்பிராய் பகுதியில் வைத்து கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு 8.15 மணியளவில் யாழ்ப்பாணம் பயணிகளை பருத்தித்துறைக்கு ஏற்றிச் சென்ற போது இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் இரவு 9.30 மணியளவில் வந்து கொண்டிருந்த திருகோணமலை சாலைக்குரிய பேருந்து மீது வைத்தியசாலை வீதியில் வைத்து கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது. அதேபோல் வாழைச்சேனை சாலைக்கு சொந்தமான பேருந்து மீது பலாலி வீதி இலுப்பையடி பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பேருந்து நடத்துநர்களினால் கோப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106