டெஸ்டில் அதிவேக அரை சதம்: தொடரும் வோர்னரின் சாதனை!
Saturday, January 7th, 2017
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 23 பந்தில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்டில் 2-வது அதிவேக அரை சதம் அடித்து வோர்னர் சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் அவுஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வோர்னர் 78 பந்தில் சதம் அடித்தார். 2-வது இன்னிங்சிலும் அவர் அதிரடி காட்டினார்.
பாகிஸ்தான் பந்து வீச்சை அடித்து நொறுங்கிய வோர்னர் 23 பந்தில் அரை சதம் அடித்தார். இதில் 7 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். இதன் மூலம் டெஸ்டில் 2-வது அதிவேக அரை சதம் அடித்து வார்னர் சாதனை படைத்தார்.
இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்க வீரர் கலிஸ் 24 பந்தில் அரை சதம் அடித்து 2-வது இடத்தில் (சிம்பாப்வேவுக்கு எதிராக, 2005-ம் ஆண்டு) இருந்தார். அதை வோர்னர் முறியடித்தார்.
முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா- உல்- ஹக் உள்ளார். அவர் 21 பந்தில் அரை சதம் (அவுஸ்திரேலியாவுக்கு எதராக, 2015) அடித்தார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106