உலகின் மிகப் பெரிய பனிப்பாறை இரண்டாக பிளவு?
Saturday, January 7th, 2017
அன்டார்ட்டிக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய பத்து பனிப்பாறைகளுள் ஒன்று இரண்டாகப் பிளவுபடப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் கடந்த தசாப்தங்களாகவே வெடிப்பு தோன்றியிருந்த போதிலும் இந்த வெடிப்பு கடந்த டிசம்பர் மாதம் சடுதியாக நீளத் தொடங்கியது.
‘லார்சன் சி’ என்று குறிப்பிடப்படும் இந்தப் பனிப்பாறையின் கனவளவு சுமார் 350 மீற்றர் ஆகும்.
5 ஆயிரம் சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவு கொண்ட இந்தப் பனிப்பாறைத் துண்டு தற்போது விரிசல் விழுந்து தொங்கும் நிலையில் உள்ளதாகவும், இன்னும் 20 கிலோ மீற்றர் நீண்டால் இரண்டாக பிளந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மொத்த பனிப்பாறையின் கால் பகுதியளவே பிளந்து செல்லவிருக்கிறது என்றாலும், இதனால் எதிர்காலத்தில் எஞ்சியுள்ள பகுதியும் பகுதி பகுதியாகப் பிரிந்து விடலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
இந்தப் பிளவு இயற்கையானதே தவிர, உலக வெப்பமயமாதலால் உண்டானதல்ல என்றும் விஞ்ஞானிகள் கூட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், லார்சன் சி பனிப்பாறை முழுவதுமாகச் சிதைந்து கடலில் கரையும் பட்சத்தில், உலக கடற்பரப்பின் உயரம் சுமார் 10 சென்றிமீற்றர் அளவு உயரலாம் எனவும் இதனால் உலகுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106