2-வது சுற்றில் செரீனா அதிர்ச்சித் தோல்வி!
Friday, January 6th, 2017
ஆக்லாந்து டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் உலக தரவரிசை யில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லி யம்ஸ், தனது சகநாட்டை சேர்ந் தவரும் 72-ம் நிலை வீராங்கனை யுமான மேடிசன் பிரிங்கிளை எதிர்த்து விளையாடினார்.
சுமார் 2 மணி நேரம் 13 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செரீனா 4-6, 7-6, 4-6, என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் அரை இறுதியில் தோல்வியடைந்த செரீனா அதன் பின்னர் 4 மாதங்கள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க வில்லை.
வரும் 16-ம் தொடங்கும் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய பகிரங்கத்தில் பங்கேற்பதற்கு தயாராகும் விதமாக ஆக்லாந்து போட்டியில் செரீனா விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106