சயதொழிலுக்கான உதவிகளை மேற்கொண்டு தருமாறு நிதா கோகுலம் பெண்கள்நலன்புரி நிலையம் அமைப்பு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை!

Thursday, January 5th, 2017

சுயதொழில் மற்றும் வாழ்வாதார உதவிகளைப் பெற்றுத்தருமாறு நிதா கோகுலம் பெண்கள், சிறுவர் நலன்புரி நிலையம் அமைப்பு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்றையதினம் (05)  குறித்த நிலைய அமைப்பின் நிர்வாக உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் நலன்புரி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடமே மேற்குறித்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டது..

குறித்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பெண்கள் தாங்கள் வேலைகளின்றி சிரமப்படுவதாகவும் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளiயும் தெரிவித்ததுடன் தமக்கு சுயதொழிலுக்கான உதவிகளைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டனர்.

அமைப்பினரின் பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்து கொண்ட அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த கோரிக்கைகளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வுகளைப் பெற்றுத் தர முயற்சி செய்வதாகத் தெரிவித்தார்.

இச் சந்திப்பின்போது தொகுதி நிர்வாகக் குழு உறுப்பினர் பிரதீபன் மற்றும் நலன்புரி நிலையம் அமைப்பின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

15910319_1285478604824557_1763672383_n

20170105_121534



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106