சுழிபுரத்தில் வாள்வெட்டு 4 பேர் படுகாயம்!
Thursday, January 5th, 2017
சுழிபுரத்தில் இனந்தெரியாதோர் மேற்கொண்டு வாள் வெட்டுக்கு இலக்காகி 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைதியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இங்கு நேற்று முன்தினம் இரண்டு குழுக்களிடையில் முரண்பாடு ஏற்பட்டது. அது நேற்றும் தொடர்ந்தது. 4பேரும் அங்கு வயல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த சிலர் தாம் நின்றிருந்த வீதிக்கு வருமாறு நால்வரையும் அழைத்தனர். அவர்களிடம் சென்றபோது அவர்கள் மறைந்து வைத்திருந்த வாளால் 4பேர் மீதும் வெட்டிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
அங்கு நின்றிருந்த ஏனையவர்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த 4பேரும் அங்கு முறையிட்ட பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என தேரியவருகின்றது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106