வித்தியா கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பத்தாவது சந்தேக நபரின் விளக்கமறியல்  ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

Thursday, January 5th, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுக்  கொடூரமாகக்  கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் 12  நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பத்தாவது எதிரியாகக் கடந்த 2015 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம்- 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட கலகே பேபிகே கமகே ராஜ்குமார் என்ற நபர் கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒரு வருடம் நிறைவடைந்தமையால் சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கும்படி அரச சட்டத்தரணியால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை மனு முன்வைக்கப்பட்டது.

மனுவை முன்வைத்த அரச சட்டத்தரணி நிசாந்த் 1997 ஆம் ஆண்டு 30 ஆம் பிணைச்சட்டம் 17 ஆம் பிரிவின்படி பத்தாவது சந்தேக நபரின் விளக்கமறியல் காலத்தை இன்றிலிருந்து மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சந்தேகநபர் இது தொடர்பில் நீதிமன்றத்தில் குறிப்பிடுகையில்,

நான் குறித்த குற்றச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லை. அத்தருணத்தில் நான் காரைநகரிலுள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றியிருந்தேன். வித்தியாவின் 45ஆம் நினைவு தினத்தின் போதே பார்வையிடுவதற்காகவே அங்கு சென்றேன். அத்தருணத்திலேயே புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டேன். இன்று நீதிமன்றத்தில் வழக்குள்ளது என எனக்குத் தெரியாது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் நான் வினாவியபோதும் அவர்கள் இது தொடர்பில் எனக்கு அறிவிக்கவில்லை.

அதனால் சட்டத்தரணிக்கோ, எனது வீட்டாருக்கோ தெரியப்படுத்தவில்லை. இதன் காரணமாக விளக்கமறியலை ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் எனக் கேட்டுக் கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி இளஞ்செழியன் சந்தேக நபரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன், சந்தேகநபரின் விளக்கமறியலை பெப்ரவரி மாதம்-02 ஆம் திகதி வரை நீடித்தும் உத்தரவிட்டார்.

??????????????



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106