ஒரு சதாப்தமாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு!
Thursday, January 5th, 2017
வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளரான ஜெ.கேல்வின் காப்பே என்ற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.
மனித உடலின் குடலை வயிற்றுடன் இணைக்கும் ‘நடுமடிப்பு’, (Mesentery) இத்தனை காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்ததென தெரிவிக்கப்படுகின்றது.
அத்துன் அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காப்பே என்ற ஆராய்ச்சியாளர் இதனை கண்டுப்பிடித்துள்ளார். வயிற்றின் நடுமடிப்பு பகுதியானது, தொடர்ச்சியான உள்கட்டமைப்பினை கொண்டதொரு தனி உறுப்பு என கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, மற்ற உறுப்புகளை போல் இதனை அணுகும் போது, இந்த உறுப்பு தொடர்பான நோய்களை வகைப்படுத்தி, அவற்றை குணப்படுத்துவது எப்படி என்ற ரீதியில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.
உடலில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுமடிப்பு என்ற இந்த உறுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவிற்கேற்ப, இந்த புதிய உறுப்பின் இயக்கம் குறித்து இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
மேலும் இதன் இயக்கம் தொடர்பாக தகவல்கள் அறிந்து கொள்ளும் பட்சத்தில் வயிறு மற்றும் குடல் பகுதி சார்ந்து பல்வேறு நோய்களை எளிமையாக குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106