தாயும் மகனும் தற்கொலை – வவுனியாவில் சம்பவம்!

Tuesday, January 3rd, 2017

வவுனியா ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியிலுள்ள கிணற்றொன்றில் இருந்து தாயும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் முதல்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவது என்னவென்றால்,

பன்றிக்கெய்தகுளம் பகுதியில் மாமனார் குடும்பத்துடன் நீண்டகாலமாக குறித்த தாய் சதீஸ்வரன் சுபாசினியும் (30வயது), மகன், சதீஸ்வரன் டிலோசனும் (7வயது) வசித்து வருகின்றனர். கணவன் கிளிநொச்சியில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இன்று காலை மாமியார் ஓமந்தை கிராமசேவையாளர் காரியாலயத்திற்குச் சென்றுள்ளார்.

அருகிலுள்ள கடைக்குச் சென்றிருந்த மாமனார் 11 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது தாயும் மகனும் வீட்டில் இருக்கவில்லை இதையடுத்து அருகிலுள்ள வீடுகளில் தேடியபோதும் இருவரும் கிடைக்கவில்லை.

இதன்போது அப்பகுதியிலுள்ள கிணற்றில் சந்தேகத்தில் பார்வையிட்டபோது தாயும் மகனும் கிணற்றுக்குள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியிலுள்ளவர்களின் உதவியுடன் சடலங்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை குறித்த சதீஸ்வரன் டிலோசன் 7வயது தனது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளதாகவும் முன்விரோதம் எதுவும் இருந்திருக்கவில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

thatkolai-680x365



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106