அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்!

Tuesday, January 3rd, 2017

புதிய ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஜனவரி முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டம் கடந்த நவம்பர் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவிற்கான நிர்ணய விலை 295 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை 25 ரூபாவாலும் மண்ணெண்ணை லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை 2 ரூபாவாலும் நெத்தலி கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன. உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை  5  ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவாலும்  பயறு  15 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருமான வரியின் சதவீதத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

3



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106