ஆண்டின் சிறந்த கால்பந்து நடுவராக மார்க் கிளாட்டன்பர்க் தெரிவு!
Thursday, December 29th, 2016
இவ்வாண்டுக்கான உதைபந்தாட்ட போட்டி நடுவர்களில் சிறந்த போட்டி நடுவருக்கான சர்வதேச கால்பந்து சபையின் விருதினை மார்க் கிளாட்டன்பர்க் பெற்றுள்ளார்.
ஐரோப்பிய கால்பந்து சம்பியன் லீக், யுரோ 2016 மற்றும் இங்கிலாந்து கால்பந்து கிண்ண இறுதிப் போட்டிகளில் நடுவராக இவர் பணியாற்றியிருந்தார். சர்வதேச கால்பந்து சபையின் இந்த வருடத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை டுபாயில் நடைபெற்றது. இதன்போது ஆண்டின் சிறந்த போட்டி நடுவருக்கான விருதினை மார்க் கிளாட்டன்பர்க் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, பரீட்சார்த்த நடவடிக்கையான வீடியோ தொழில்நுட்பம் குறித்து மார்க் கிளான்டன்பர்க்கிடம் கேட்கப்பட்டபோது, எதிர்காலத்தில் இத்தகைய திட்டம் மிகவும் சிறந்தது என்று பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ இந்த வீடியோ தொழில்நுட்பம் தேவை என்றே பெருமளவான நடுவர்கள் கூறுவர். நடுவர்கள் தவறுகள் இழைப்பர். நானும் சில போட்டிகளின்; போது தவறான முடிவுகளை அறிவித்துள்ளேன். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நடுவர்களின் முடிவை பரிசீலனை செய்யும் திட்டம் அவசியம் என்பதை உறுதி செய்ய விரும்புகின்றேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106