அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்!

Thursday, December 29th, 2016

அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டிருப்பதாக, தமிழக முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.ஜெயலலிதாவின் மறைவையடுத்து வி.கே. சசிகலாவின் தலைமையின் கீழ் பணியாற்றுவோம் என கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இன்று இடம்பெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் கூட்டம் தொடங்கியது.

இந்த பொதுக்குழுவில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதாவிற்குப் பின்னர் வி.கே. சசிகலாவிடம் அதிமுக தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலா தலைமையின் கீழ் கட்சியில் பணியாற்றுவோம் என கட்சி உறுப்பினர்கள் அனைவரும் உறுதி அளித்துள்ளனர்.இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பித்துரை ஆகியோரும் போயஸ் தோட்டத்திற்கு சென்று சசிகலாவை சந்தித்து தீர்மானத்தை வழங்கியுள்ளனர்.

0213



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106