பாராளுமன்ற அறைக்குள் பிரவேசிக்க விஷேட ஆடைக் கட்டுப்பாடு!
Wednesday, December 28th, 2016
கையில்லாத ஆடைகளை அணிந்து பாராளுமன்றத்தில் அரசு அதிகாரிகள் அமரும் விசேட அறைகளில் பிரவேசிப்பதை தடை செய்வதாக இலங்கை பாராளுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பாராளுமன்றத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கும் சபைக்கூட்டங்களில் கலந்துக்கொள்ள வரும் அரசு அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விடயத்தை இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி கட்டளை அதிகாரி நரேந்திர பெர்னாந்து குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பாக விசேட குறியீடுகள் இருப்பதாக மேலும் தெரிவித்த அவர்,
இதற்கமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும், இதன்படி பெண்கள் பாராளுமன்ற விசேட அறைகளுக்குள் பிரவேசிக்கும் போது சேலை மற்றும் நீண்ட கையுள்ள ஆடைகளை அணிவது அவசியமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஆண்கள் தேசிய உடை இல்லா விட்டால் நீண்ட கைகளை கொண்ட ஆடைகளை அணிவது அவசியமென்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான அறிவித்தளொன்றை திடீரென பிறப்பிக்க நேரிட்ட காரணங்கள் குறித்து வினவியபோது பதில் வழங்கிய பாராளுமன்றத்தின் பிரதி கட்டளை அதிகாரி நரேந்திர பெர்னாந்து, புதிய அரச அதிகாரிகளுக்கு பாராளுமன்ற ஆடை குறியீடுகள் சம்பந்தமாக போதிய தெளிவு இல்லாதமை காரணமாக கடந்த காலத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு பாராளுமன்ற மற்றும் அரசு அதிகாரிகளை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106