2017ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

Monday, December 26th, 2016

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு நாட்டிலுள்ள அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் பின்பற்ற வேண்டிய பாடசாலைத்தவணை அட்டவணையினை கல்வி அமைச்சின் 23ஃ2016 ஆம் இலக்கமும், 2016.08.05ஆம் திகதியும் கொண்ட சுற்று நிருபம் மூலம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளுக்கான 1ஆம் தவணை 2017 ஜனவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2017ஏப்ரல் 5ஆம் திகதி புதன்கிழமை வரை நடைபெறும்.

2ஆம் தவணை 2017 ஏப்பிரல் 26ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் 2017 ஆகஸ்ட் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும். 3ஆம் தவணை 2017செம்டெம்பர் 06ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் 2017 டிசம்பர் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இதேவேளை நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கான 1ஆம் தவணை 2017 ஜனவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வியாழக்கிழமை வரை நடைபெறும். 2ஆம் தவணையில் 1ஆம் கட்டம் 2017 ஏப்ரல் 19ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் 2017 மே 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். 2ஆம் கட்டம் 2017 ஜீன் 28ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் 2017 ஆகஸ்ட் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். 3ஆம் தவணை 2017 ஆகஸ்ட் 28ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2017 டிசம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106