புதிய மத நோக்கின்பால் ஒளிர்ந்த நட்சத்திரங்கள் அன்றுபோல் இன்றும் மானிட உன்னதத்தின் வழித்தடமாக மிளிர்கின்றன -ஜனாதிபதி!

Sunday, December 25th, 2016

ஏழையின் மாட்டுத் தொழுவத்தை மையமாகக் கொண்டு தோன்றிய புதிய மத நோக்கின்பால் ஒளிர்ந்த நட்சத்திரங்கள் அன்றுபோல் இன்றும் மானிட உன்னதத்தின் வழித்தடமாக மிளிர்கின்றன என்று.நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபத விடுத்திருக்கும்  வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாவது:

மானிட பரிணாம வளர்ச்சியில் மனிதன் பெற்ற சிறப்புமிக்க வெற்றிகளில், மதம் சார்ந்த விடயம் முன்னிலையிலுள்ளது. மனிதர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளே அவர்கள் பிறரிடத்தில் அன்பு செலுத்துவதற்கும் அவர்களது உரிமைகள் தொடர்பில் ஆழமாக சிந்திப்பதற்கும் காரணமாக அமைகிறது.

இரண்டாயிரத்திப்பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் அறியாமை காரணமாக சமூக சீர்கேடுகள் நிறைந்திருந்த காலத்திலேயே குழந்தை யேசுவின் பிறப்பு நிகழ்ந்தது. அந்நாளில் ஏழையின் மாட்டுத் தொழுவத்தை மையமாகக் கொண்ட புதிய மத நோக்கின்பால் ஒளிர்ந்த நட்சத்திரங்கள் அன்றுபோல் இன்றும் மானிட உன்னதத்தின் வழித்தடமாக மிளிர்கின்றன

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உலகளாவிய விழாவாக கொண்டாடும் நத்தார் பண்டிகையில் பெருங்கருணையின் நாதமே ஓங்கி ஒலிக்கிறது. அன்று ஆணவம் பிடித்திருந்த ஏரோது மன்னன் போன்ற மன்னர்களை வரலாற்றுக்கே மட்டுப்படுத்தி,  சகவாழ்வின் செய்தியை உலகுக்கு கொண்டுவந்த யேசு கிறிஸ்து பிரானை புனிதத்தன்மைக்கு உயர்த்தியது நல்ல விடயங்களை வணக்கத்துக்குரியவையாக கவனத்திற்கொள்பவாகள் உலக மக்களேயாவர்.

அனைவர் மீதும் அன்பை செலுத்தும் நத்தார் பண்டிகையின் உண்மையான செய்தியான சமாதானம், மகிழ்ச்சி, கருணை நிறைந்த சிறப்பான நத்தார் இம்முறை அமைய வேண்டுமென அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் அனைவருக்கும் சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்த நத்தார் வாழ்த்துக்கள்! என்று தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106