ஆஸ்திரேலிய ஓபன்: விலகினார் டெல் போட்ரோ!
Sunday, December 25th, 2016
ஆர்ஜென்டீனா டென்னிஸ் வீரரான ஜுவான் மார்டின் டெல் போட்ரோ மணிக்கட்டு காயம் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சனிக்கிழமை கூறியதாவது:
கையின் மணிக்கட்டுப் பகுதியில் காயம் கண்டுள்ள டெஸ் போட்ரோ முழுமையாக அதிலிருந்து மீண்டு வராத காரணத்தால் ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தத் தகவலை தனது அணி நிர்வாகத்தின் மூலம் அவர் உறுதி செய்துள்ளார். இதனிடையே ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு முன்பாக அவர் கலந்துகொள்வதாக இருந்த ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
முன்னதாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலகின் 6-ஆம் நிலை வீரரான மரின் சிலிச்சை வீழ்த்திய டெல் போட்ரோவுக்கு 2016-ஆம் ஆண்டு சீசன் சிறப்பானதாக அமைந்தது. முந்தைய போட்டிகளில் வாவ்ரிங்கா ஜோகோவிச் நடால் முர்ரே போன்ற முன்னணி வீரர்களையும் அவர் வெற்றி கண்டார். அதைத் தொடர்ந்து உலகின் 4-ஆம் நிலை வீரராக தனது டென்னிஸ் வரலாற்றில் முதல் முறையாக ஏற்றம் கண்ட நிலையில் மணிக்கட்டு காயம் கண்டு அதிலிருந்து மீண்டு வருகிறார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106