820 பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரிய நியமனம் – வடக்கு கல்வியமைச்சின் செயலாளர் ரவீந்திரன்!

Tuesday, December 20th, 2016

வடக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரிய வெற்றிடத்திற்காக போட்டிப்பரீட்சையில் தோற்றிய 2ஆயிரத்து 200பட்டதாரிகளில் 820பேர் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு மாகாணத்தில் நிலவும் 1460 ஆசிரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கான அனுமதி கோரப்பட்டது. இதில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களிற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பெறுபேறுகள் வரும்வரையில் காத்திருக்கின்றோம். ஏனைய பாடங்களிற்கான வெற்றிடங்கள் 160 சிங்கள பாடரீதியிலான வெற்றிடங்களும் உள்ளடக்கம். இந்த 160 சிங்கள பாட ஆசிரியர்கள் வெற்றிடத்திற்குப் பதிலாக 68 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்தமையினால் அவர்களிற்கு போட்டிப்பரீட்சையின்றி நேரடியாகவே நேர்முகத்தேர்விற்கான ஏற்பாடுகள் இடம்பெறும் அதேவேளையில் கணிதம், விஞ்ஞானம் தவிர்ந்த 820 ஆசிரியர்களும் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டு நியமனம் வழங்கப்படும். இவ்வாறு நியமனம் செய்யப்படும் சகல ஆசிரியர்களும் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிற்கே நியமிக்கப்படுவார்கள். யாழ்.குடாநாட்டின் கடல் கடந்த தீவுகளிற்கும் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் சில பாடசாலைகளிற்கும் குடாநாட்டு நியமனம் வழங்கப்படும். என்றார்

hqdefault



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106