உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு.!

Monday, December 19th, 2016

அரிசி விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் இன்று முதல் உணவுப்பொதிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் அசெல சம்பத்,

அரிசி வலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் உணவுப்பொதியின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். இது இலாபமீட்டுவதற்காக மேற்கொள்ளப்ட்ட தீர்மானம் அல்ல. அரிசியின் விலை அதிகரிப்பால் நாம் ஏற்கனவே உள்ள விலையில் உணவுப்பொதிகளை விற்பதில் சிரமப்படுகின்றோம்

அதனடிப்படையில் மரக்கறி சாப்பாடொன்றின் விலை 100 ரூபாவிலிருந்து 110 ரூபாகவும் மீன் உணவுப்பொதியொன்று 130 ரூபாவிலிருந்து 140 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோழி இறைச்சி சாப்பாட்டு பொதியொன்றின் விலை 160 ரூபாவிலிருந்து 170 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் அரிசியின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. இதன்காரணமாக அரிசியின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. சிலர் களஞ்சியப்படுத்தும்போது பெருமளவு அரிசியை சந்தைக்கு கொண்டுவராமல் பதுக்கிவிடுகின்றனர். அதுமட்டுமல்லாது விலங்குகளுக்கான உணவிலும் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க முறையான திட்டமிடல் அவசியமாகும்.

எனவே இலங்கை நுகர்வோர் சபைக்கு நாம் ஒரு சவாலை முன்வைக்கின்றோம். முடியுமானால் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு பதுக்கி வைத்துள்ள அரிசி முட்டைகளை மீட்டுக்காட்ட வேண்டும் என்றார்.

lunch_packet



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106