அலெப்போவில் மக்கள் வெளியேறுவதில் தொடரும் உறுதியின்மை!
Monday, December 19th, 2016
சிரியாவின் அலெப்போ நகரில் இருந்து, ஆயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்களையும், பொது மக்களையும் வெளியேற்றும் நடவடிக்கையை மீண்டும் தொடங்குகின்ற திட்டம் தெடர்பாக உறுதியின்மை நிலவி வருகிறது.
கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் சிறிய இடத்தில் இருந்து பேருந்துகள் மூலம் மக்கள் வெளியேற ஆரம்பித்து விட்டனர் என்று அரசு ஊடகம் தெரிவித்திருக்கிறது.
ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து நகரின் மேற்கில் கிளர்ச்சியாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ள நகரத்திற்கு மக்கள் வெளியேறி செல்லும் அதே வேளையில் அலெப்போவிலிருந்து மக்கள் வெளியேறுவதும் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், அரசு கட்டுப்பாட்டில் இருக்கின்ற பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்காக சென்ற பேருந்துகளை, மக்களை வெளியேற்றும் இந்த திட்டத்தை எதிர்க்கின்ற கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து எரித்துவிட்டதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106