விமான நிலையத்திற்குள் முறையற்ற செயல்- அதிருப்தியில் பயணிகள்!
Monday, December 19th, 2016
ஜனாதிபதியின் மலேசிய விஜயத்தில் கலந்துக் கொண்ட ஊடக குழுவின் உறுப்பினர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் எதிர்பாராத நிலைமை ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளார்.
அவர் கொண்டு வந்த கைப்பை இன்று காணாமல் போனதை தொடர்ந்தே அவர் இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். ஊடக குழு இலங்கை வந்தவுடன் ஸ்ரீலங்கன் விமான நிலையத்தினுள் இந்த கைப்பை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான பைகள் பொறுப்பு பிரிவு அதிகாரி கஞ்சனா தேவப்பிரியவிடம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை கண்டுபிடித்துக் கொடுப்பதற்காக எவ்வித தலையீட்டுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான பைகள் சேவை ஸ்ரீலங்கன் விமான சேவையினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது.
பின்னர் ஜனாதிபதி ஊடகபிரிவு பணிப்பாளர் நாயகம் தர்ம ஸ்ரீர பண்டாநாயக்க உட்பட குழுவினரின் தலையீட்டில் காணாமல் போன கைப்பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமான பயணிகள் இவ்வாறு சிரமத்திற்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் அவர்கள் இதனை விடவும் பொறுப்புடன் தலையிட்டு செயற்பட வேண்டும் என குறித்த சந்தர்ப்பத்தில் இணைந்திருந்த ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106