காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசத் தொழிற்பயிற்சி கற்கை!
Sunday, December 18th, 2016
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையால் யாழ். காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசமாக நடாத்தப்படவுள்ள தொழிற்பயிற்சிக் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
சமையலாளர், வெதுப்பாளர், அறைப் பராமரிப்பாளர், உணவு மற்றும் குடிபானம் பரிமாறுவோர், இரு சக்கர மற்றும் முச்சக்கர வண்டித் திருத்துநர், அலுமினியப் பொருத்துநர், வீட்டு மின் இணைப்பாளர், மரவேலை தொழில் நுட்பவியலாளர், பெண்கள், சிறுவர்களுக்கான ஆடை வடிவமைப்பாளர், கட்டட நிர்மாண உதவியாளர் போன்ற கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கற்கை நெறிகளை மேற்கொள்ள விரும்புவோர் மாவட்ட அலுவலகம், முதலாம் மாடி, வீரசிங்கம் மண்டபம் எனும் முகவரியிலோ அல்லது காரைநகரிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்திலோ எதிர்வரும்- 23 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related posts:
பருத்தித்துறை உணவகங்களில் திடீர் சோதனை!
கோதுமை மாவின் விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!
சுமந்திரன எம்.பியை தோற்கடித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரானார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!
|
|
|


