அடித்துப் பணம் பறித்தவருக்கு ஒத்திவைத்த 9 மாத சிறை!

Saturday, December 17th, 2016

ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 20ஆயிரத்து 710ரூபா பணத்தினை கொள்ளையடித்த குற்றவாளிக்கு 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் சாவகச்சேரி நீதிவான் திருமதி சிறி நந்தசேகரன் தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட பணமான 20,710 ரூபாவினை மீண்டும் முறைப்பாட்டளரிடம் ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி மட்டுவில் பகுதியில் நபர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்த பணத்தினை ஒருவர் கொள்ளையடித்திருந்தார். இது தொடர்பில் பணத்தைப் பறிகொடுத்தவர் சாவகச்சேரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குறித்த நபருக்கு குற்றப்பதிரம் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது அவர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து 5 வருடங்கள் ஒத்திவைத்த 3மாத சிறைத்தண்டனையும் கொள்ளையடித்த குற்றச்சாட்டிற்கு 5 வருடங்கள் ஒத்திவைத்த 6மாத சிறைத்தண்டனையும் விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.

1453437963-7126



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106