பாகிஸ்தானுக்கு எதிராக 429 ஓட்டங்களை குவித்தது அவுஸ்திரேலியா!

Saturday, December 17th, 2016

பிரிஸ்பேனில் பாகிஸ்தானுக்கு எதிராக பகல்- இரவாக நடைபெறும் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா சகல விக்கட்டுக்களையும் இழந்து 429 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட தீர்மானித்தது. அதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

ஸ்மித் 110 ஓட்டங்களுடனும், ஹேண்ட்ஸ்காம்ப் 64 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். அவுஸ்திரேலியா அணி சார்பாக அணித்தலைவர் ஸ்மித்(130), ஹேண்ட்ஸ்காம்ப் (105), சதமடித்ததுடன் ரென்ஷா(71) அரைச்சதம் பெற்றுக்கொண்டார்.

பாகிஸ்தான் அணி சர்பாக பந்து வீச்சில் மொகமது ஆமிர், வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 4 விக்கட்டுகளையும் யாசீர் ஷா 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

மேலும், மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106