ட்ரம்பை கொலை செய்ய முயன்ற பிரித்தானியருக்கு சிறை!
Friday, December 16th, 2016
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பை கொலை செய்வதற்கு சதி செய்தமை தொடர்பில் பிரித்தானியருக்கு 12 மாதங்களும் ஒருநாளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பை கொலை செய்யும் நோக்குடன் பொலிஸாரிடம் இருந்து துப்பாக்கியை பறிப்பதற்கு முயற்சி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட 20 வயதான மைக்கல் சன்பேர்ட் என்ற இளைஞருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செயற்பட்டமை குறித்து தனது புதல்வர் மிகவும் மனம்வருந்துவதாக மைக்கல் சன்பேர்ட்டின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
கொலைச் சதி செய்த குற்றச்சாட்டில் சன்பேர்ட்டிற்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிரித்தானியாவிற்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில், அவர் நான்கு மாதங்களில் விடுவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் உளநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் வலிப்பு தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த இளைஞர் தாம் செயற்பட்ட விதம் தொடர்பில் கண்ணீர்மல்க மன்னிப்புகோரியுள்ளதாக அமெரிக்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106