எமது அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை தென்கிழக்கு இளைஞர்கள் கோரிக்கை!
Thursday, December 15th, 2016
அரியாலை தென்கிழக்கு, மணியம்தோட்டம் பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் குறித்த பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றையதினம் அரியாலை தென்கிழக்கு பகுதி இளைஞர் யுவதிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடமே குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்
மேலும் குறித்தபகுதி வறிய மக்களதும் இளைஞர் யுவதிகளினதும் எதிர்கால வாழ்வியலுக்கான உதவித்திட்டங்கள் மற்றும் தொழில்வாய்ப்பு, கல்வி, சுகாதார மேம்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருமாறு இரவிந்திரதாசனிடம் அப்பகுதி இளைஞர் யுவதிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
குறித்தபகுதி மக்களது நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துகொண்ட இரவிந்திரதாசன் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106