ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் இவ்வாண்டு சிறுவர் துஷ்பிரயோகம் குறைவு – பிரதேச செயலர்!

Thursday, December 15th, 2016

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் இவ்வருடம் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளதாக பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் சிறுவர் தொடர்பான எந்தவித முறைப்பாடும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு கிடைக்கப்பெறவில்லை என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிளவில் காணப்பட்ட நிலையில் அதனை குறைக்கும் முகமாக அரசாங்க அதிபரின் வழிகாட்டலுக்கமைய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் சமூக சேவை பிரிவு, பெண்கள் பிரிவுடன் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். மேலும் தாய்,தந்தை அரவணைப்பின்றி உறவினர்களுடன் வாழ்ந்த வரும் சிறுவர்களும் அதிகளவில் கண்காணிக்கப்படுகின்றனர்.

இதனால் துஷ்பிரயோக சம்பவங்கள் கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. மேலும் பொலிஸாரின் உதவியுடன் பாடசாலை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் கல்வி வழிகாட்டல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

arasa-athipar-vetri-kannam-3



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106