கொழும்பில் இந்திய கப்பல்கள் துறைமுகத்தில்
Saturday, April 16th, 2016
இந்தியாவின் மூன்று கப்பல்கள் பயிற்சி சுற்றுலாப் பயணமாக நேற்று(15) காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன.
இந்திய கடற்படையினருக்கு சொந்தமான சுஜாதா, டீர் ஆகிய கப்பல்களும், இந்திய கடலோர காவற்படையினருக்கு சொந்தமான வருண என்ற கப்பலும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக கப்பல்களை வரவேற்றுள்ளனர்.
இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர், எதிர்வரும் 19ஆம் திகதி இந்த கப்பல்கள் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.
Related posts:
வைத்தியசாலைக்கு வருவோர் தடுப்பூசி அட்டையை கொண்டுவருவது – யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்...
டொலர் நெருக்கடிக்கு நாங்கள் காரணமில்லை - மக்களிற்கு ஜனநாயகத்தை உறுதி செய்யும் விதத்திலேயே ஆட்சிசெய்க...
இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தகவ...
|
|
|


