ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் !

Wednesday, December 14th, 2016

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னேற்றத்துக்காக மேற்கொண்ட சேவையைப் பாராட்டி கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சங்கத்தின் பிரதம ஆலோகர் குப்பியாவத்தே போதானந்த தேரர் உட்பட ஐந்து பேருக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தினால் சிறுநீரக நிதியத்துக்கு நிதி அன்பளிப்பும் வழங்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் சந்திக்க ஹங்கந்தவினால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா வீ. ராதாகிருஸ்ணன் பிரதியமைச்சர் துனேஸ் ஹங்கந்த பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ba464df163b871bb5ef08be3c3f6039f_XL



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106