2017 நவம்பரில் ஆஷஸ் டெஸ்ட்: 2018 ஜனவரியில் ஒருநாள் தொடர்!

Wednesday, December 14th, 2016

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு நவம்பரிலும் ஒருநாள் தொடர் 2018 ஜனவரியில் நடைபெறுகிறது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அட்டவணையின்படி, அவுஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு நவம்பர் 23-இல் தொடங்கி 2018-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி வரையிலும், ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2018 ஜனவரி 14 முதல் 28-ஆம் தேதி வரையிலும், நடைபெற உள்ளது.

இதுகுறித்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்க தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சுதர்லேண்ட் கூறியதாவது:
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஒரு போட்டி (2-ஆவது போட்டி) முதல் முறையாக பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் 2017 டிசம்பர் 2-6 வரை நடைபெற உள்ளது. பெர்த் மைதானத்தை 60,000 பேர் அமரக் கூடிய வகையில் மாற்றுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், பெர்த் டெஸ்டை 2017 டிசம்பர் மாதத்தின் இடையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஜேம்ஸ் கூறினார்.
முன்னதாக, கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா -நியூஸிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் பகலிரவு ஆட்டமாக இளஞ்சிவப்பு நிற பந்தைக் கொண்டு முதல் முறையாக அடிலெய்டில் நடத்தப்பட்டதற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு அதிரான டெஸ்ட் தொடரும் பகலிரவு ஆட்டமாக நடத்தப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரும் அதேபோன்று பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

list



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106