ஓமந்தை முருகன் ஆலயத்தில் ஐம்பொன் முருகவேல் திருட்டு – தெய்வ விக்கிரகங்கள் உடைத்தெடுப்பு!

Tuesday, December 13th, 2016

வவுனியா – ஒமந்தை, ஆறுமுகத்தான் புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் ஐம்பொன் முருகவேல் மற்றும்  தெய்வ விக்கிரகங்கள் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் பகல் 11 மணியளவில் பூஜைக்காக குருக்கள் ஆலயத்திற்குச் சென்ற போதே ஆலயம் உடைக்கப்பட்டு திருடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஓமந்தை பொலிசாருக்கு ஆலய நிர்வாகத்தால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ் ஆலயத்தின் மதில் வழியாக உள் நுழைந்த திருடர்கள் வலது புறமாக உள்ள கதவை உடைத்து ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருந்த ஐம்பொன் முருகவேல், ஆலயத்தில் இருந்த வள்ளி, தெய்வானை சிலைகள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதுடன், ஆலய உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் திருடப்பட்டுள்ளது. செப்பில் செய்யப்பட்டிருந்த வைரவர் சிலை உடைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை இரவு வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் அந்தோனியார் சிலை ஒன்றும் விசமிகளால் உடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

625.0.560.320.160.600.053.800.668.160.90



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106