அச்சமின்றி முறையிடலாம் வடக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
Tuesday, December 13th, 2016
உங்கள் பிரதேசங்களில் ஏதாவது சமூக விரோதச் செயல்கள் இடம்பெறும் பட்சத்தில் எவ்வித அச்சமுமின்றி என்னுடைய அலுவலக்தில் முறையிடலாம் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் நடமாடும் சேவையின் இறுதிநாள் நிகழ்வு யாழ்.பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது அலுவலகம் 24 மணித்தியாலமும் இயங்குகின்றது. நீங்கள் எந்தநேரமும் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். உங்களுக்குப் பணி செய்வதற்காக 24 மணித்தியாலமும் நாங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்றோம். நாட்டில் சமூகத்தில் இடம்பெறும் வன்செயல்கள் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நாம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கிறோம். வீதிப்போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாகவும் நாம் எமது பணியை வழங்கி வருகின்றோம். எல்லாவற்றிற்;கும் மேலாக நாம் எங்கள் பிரதேசங்களில் பரவி வரும் டெங்கு நோய்த் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பணியாற்றுகின்றோhம். யாழ்ப்பாணத்தில் கடமை செய்கின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களில் அநேகமானோhர் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள் மக்களுக்கான சேவைகளை மகிழ்ச்சியுடன் வழங்கி வருகின்றோம். நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பழகுவீர்களாயின் இங்குள்ள குற்றச்செயல்கள் அனைத்தும் தூயமைப்படுத்தப்படும் என்று கருதுகின்றேன். – என்றார்

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106