யாழ். கல்வியங்காடு கட்டைப் பிராய்ப் பகுதியில் வாள்வெட்டுக் கும்பலை விரட்டியடித்த மக்கள்!
Monday, December 12th, 2016
யாழ். கல்வியங்காடு கட்டைப்பிராய்ப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(11) நள்ளிரவு மூன்று மோட்டார்ச் சைக்கிள்களில் வாள்களுடன் வந்து அட்டகாசம் புரிந்த ஆறு பேர் கொண்ட இளைஞர்களான வாள்வெட்டுக் கும்பலைக் கிராம மக்கள் பலர் ஒன்றிணைந்து விரட்டியடித்துள்ளனர்.
இதன் போது குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளதுடன், வாள்வெட்டுக் குழுவினர் பயன்படுத்திய மோட்டார்ச் சைக்கிளொன்றை மக்கள் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக அப் பகுதி பொதுமக்கள் கோப்பாய்ப் பொலிஸாருக்கு முறையிட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட மோட்டார்ச் சைக்கிள் வாள்வெட்டுக் கும்பலுடையது எனப் பொதுமக்கள் கூறிய போதும் அதனை ஏற்காத முதலில் ஏற்க மறுத்த பொலிஸார் இந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் சிக்கிய ஒருவருடைய மோட்டார்ச் சைக்கிள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்துக் கோபமடைந்த மக்கள் பொலிஸாருடன் நீண்ட நேரம் முரண்பட்டுள்ளனர். இதன் பின்னரே சம்பவம் தொடர்பான முறைப்பாட்டைப் பொலிஸார் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரின் இத்தகு செயற்பாடு தொடர்பில் அப் பகுதி மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106