எனக்கு அதொன்றும் பெரிய விடயமல்ல..! மேத்யூஸ் !
Sunday, December 11th, 2016
பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும் போது தரவரிசையை பற்றி எல்லாம் பெரிதாக நினைக்க கூடாது என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் குறித்து இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் கூறுகையில், தென்ஆப்பிரிக்கா போன்ற பெரிய அணிக்கு எதிராக விளையாடும் போது தரவரிசை ஒரு பெரிய விடயம் இல்லை.
இந்த தொடர் கண்டிப்பாக சவால் நிறைந்ததாக இருக்கப் போகிறது. எங்களுடைய குறிக்கோள் சிறப்பாக செயல்படுவது மட்டுமே. அதேபோல் தென்ஆப்பிரிக்க சூழ்நிலையும் எங்களுக்கு கடினமாக இருக்கப் போகிறது. ஆனால் விரைவில் அதற்கு ஏற்ப நாங்கள் மாறிவிடுவோம் என்று கூறியுள்ளார்.
மேலும், டிக்வெல்ல மற்றும் அசல குணரத்னே ஆகியோர்களை அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்ற சனத் ஜெயசூரியாவின் கருத்தை ஏற்றுக் கொண்ட மேத்யூஸ், என்னையும், சந்திமாலையும் நீக்கினால் மட்டுமே அவர்களுக்கு இடம்கிடைக்கும் என்று சிரித்தபடியே கூறியுள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106