புலிகளின் தலைமை இல்லை என்பதால் தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினையும் தீர்ந்துவிட்டதாக அர்த்தமல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!
Sunday, December 11th, 2016
கடந்த கால கசப்பான வரலாறுகளுக்காக தமிழ் பேசும் மக்கள்
அரசியல் தீர்வு விடயத்தில் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதையே நான் இந்த சபையில் வினையமாக கேட்டுக்கொள்கிறேன்
இதே வேளை புலிகளின் தலைமை அற்றுப்போய் விட்ட இந்த சூழலில் தமிழ் பேசும் மக்களுக்கு இனி பிரச்சினைகள் எதுவும் இல்லை என்ற தொனிப்பொருளில் சிலர் பேச முற்படுகிறார்கள்.
புலிகளின் தலைமை தனித்தமிழ் இராட்சியமொன்றை இலக்காக கொண்டிருந்த நிலையிலும்,…
அன்றில் இருந்தே நான் அடிக்கடி ஒரு விடயத்தை வலியுறுத்தி வந்திருக்கிறேன்.
புலிகளின் தலமையின் பிரச்சினை என்பது வேறு!
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை என்பது வேறு!!
இதையே நான் அன்று தொலை தூரப்பார்வையில் கூறிய போது பலரும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.
இன்று புலிகளின் தலைமை இல்லை என்ற காரணத்தை வைத்துக்கொண்டு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையும் முடிவிற்கு வந்து விட்டதாக யாரும் கருதிவிடக்கூடாது. இதை நான் இந்த சபையில் வலியுறுத்தி கூற விரும்புகிறேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்ட இறுதிநாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106