500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!
Saturday, December 10th, 2016
பிரான்ஸ் நாட்டில் 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 3,000 பேர் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள Mantes-la-Jolie என்ற பகுதியில் கட்டுமானப்பணி நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் நிலத்தில் இருந்து ராட்சத மர்ம பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாரிகள் அதனை சோதனை செய்தபோது, அது இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு என கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தகவல் பரவியதும் அப்பகுதி முழுவதும் ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் உடனடியாக சுமார் 3,000 பேரை அப்பகுதியை விட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.
வெடிகுண்டை அப்புறப்படுத்தி சோதனை செய்தபோது அது 500 கிலோ எடையுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து நாட்டில் இருந்து வான் வழியாக இந்த வெடிகுண்டு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேக எழுந்துள்ளது.
எனினும், இத்தகவல்களை உறுதிப்படுத்த வெடிகுண்டை பாதுகாப்பாக கைப்பற்றியுள்ள அதிகாரிகள் அதனை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106