கொலையாளியை கண்டுபிடிக்க உதவினால் ரூ.15 லட்சம் !

Saturday, December 10th, 2016

சுவிட்சர்லாந்து நாட்டில் நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த கொலையாளியை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு பொலிசார் அறிவித்துள்ளனர்.

சுவிஸில் உள்ள Solothurn மாகாண பொலிசார் தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.இதே மாகாணத்தில் உள்ள Olten நகரில் இருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் பொலிசாருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது.

தகவலை பெற்று குறிப்பிட்ட குடியிருப்பிற்கு சென்றபோது, 49 வயதான நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், கடந்த ஓராண்டாக நபரை கொலை செய்த கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்து வந்துள்ளது.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், ‘இவரை கொலை செய்த நபர் குறித்து தகவல் அளிக்கும் நபருக்கு 10,000 பிராங்க்(14,84,604 இலங்கை ரூபாய்) பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலையாளி தொடர்பான தகவல் அளிக்க விரும்புபவர்கள் பொலிசாரை info.police@kapo.so.ch என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

25360-238x178



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106