விதிமுறையை மீறினால் முக்கியஸ்தர்களின் வாகனங்களும் தண்டம்!
Saturday, December 10th, 2016
விதி முறைகளை மீறிச் செயற்படும் முக்கியஸ்தர்களின் வாகனங்களை கண்காணிக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வீதிப் போக்குரத்து விதிகளை மீறி பயணம் செய்யும் அமைச்சு பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரிகளின் வாகனங்கள் ஆகியனவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நேற்று முதல் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் வீதிப் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவு வாகனங்களுக்கு அபராதம் விதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விதி மீறல்களில் ஈடுபட்டு பொலிஸாரின் உத்தரவிற்கு அமைய நிறுத்தாது செல்லும் வாகனங்களின் இலக்கங்களை குறித்துக் கொண்டு அது தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மோட்டார் போக்குவரத்துப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.
மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறி வீதிகளில் பயணிக்கும் பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவு வாகனங்கள் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
விதி மீறல்களில் ஈடுபடும் முக்கிய பிரபுக்களின் வாகனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106