தலையை பந்து தாக்கியதால் நிலைகுலைந்து விழுந்தார் நடுவர்!  

Friday, December 9th, 2016

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.இந்நிலையில் 49வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 2வது பந்தை ஜென்னிங்ஸ் எதிர்கொண்டார்.

அவர் ஸ்கொயர் லெக் திசையில் அடித்த பந்தை களத்தடுப்பில் இருந்த புவனேஸ்வர் தடுத்து வீசினார்.அப்போது அந்த பந்து லெக் அம்பயராக நின்று கொண்டிருந்த அவுஸ்திரேலியாவின் பால் ரீபெல் தலையின் பின்பக்கத்தை தாக்கியது.

இதனால் நிலைகுலைந்து அவர் விழுந்ததால் மைதானத்தில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவக்குழுவும் விரைந்து வந்து முதலுதவி செய்தது.

இதன் பின்னர் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவின் எராமஸ் மைதான நடுவராக பணியாற்ற வந்தார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106