நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: தொடரை வென்றது ஆஸி!
Thursday, December 8th, 2016
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி தொடரை 2- – 0 கைப்பற்றியது.
அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் கன்பெர்ராவில் நேற்று நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி அவுஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் வோர்னர் (119), ஸ்மித் (72), ஹெட் (57), மார்ஷ் (76 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 378 ஒட்டங்கள் குவித்தது.
பின்னர் 379 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணி 47.2 ஓவரில் 262 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சகலவிக்கெட்டையும் இழந்தது. இதனால் 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா 2-0 எனக் கைப்பற்றியது. நியூசிலாந்து அணி சார்பில் குப்தில் 45 ஓட்டமும், தலைவர் வில்லியம்சன் 81 ஓட்டமும், நீசம் 74 ஓட்டமும் எடுத்தனர். அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106