தமிழக முதல்வரின் மறைவால் கச்சதீவு அந்தோனியார் ஆலய புனிதப்படுத்தும் நிகழ்வு ஒத்திவைப்பு!
Tuesday, December 6th, 2016
புதிதாக கட்டப்பட்டுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் புனிதப்படுத்தும் திருவிழா தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ். ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
கச்சதீவில் புதிதாக புனித அந்தோனியார் ஆலயம் கட்டப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலயத்தின் புனிதப்படுத்தும் விழா நாளை (7) நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தமிழக முதல்வர் செல்வி ஜெயராம் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார். இதனையடுத்து புனிதப்படுத்தம் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ் ஆயர் இல்லம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு மீண்டும் புள்ளிகள் வழங்கும் முறை அறிமுகம் - போக்குவரத்து அமைச்சு...
எச்சரிக்கையாக இருங்கள்கு பொது மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகள் குறைக்கப்படும் -உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்...
|
|
|


