எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே ஜெயலலிதா உடல் நல்லடக்கம் இன்று நடைபெற வாய்ப்பு?
Tuesday, December 6th, 2016
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக கடலோர ஒழுங்கு முறை சட்டத்தில் இருந்து போதிய விலக்குப் பெற்று நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, அவரது உடல் அவரின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்பின்பு, சென்னை அரசினர் தோட்டத்துக்கு அருகேயுள்ள ராஜாஜி ஹாலில் பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும் எனத் தெரிகிறது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சியினர், பொது மக்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் சென்னை கடற்கரை சாலையில் நினைவிடம் அமைக்கப்பட்டு அங்கே வைக்கப்படும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106