19 ஓட்டோ சாரதிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
Monday, December 5th, 2016
128 இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்கள் மீது தாக்குதல் மற்றும் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 19 ஓட்டோச் சாரதிகளையும் எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பின் போது கல்கந்த ரயில் கடவையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது,
கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்ட இவர்கள், நேற்று முன்தினம் நீர்கொழும்பு பதில் நீதிவான் சாந்த நிரியெல்ல முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனியார் பஸ் ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பின் போது சேவையில் ஈடுபட்ட சுமார் 128 இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்தச் சபையின் தலைவர் தெரிவித்தார். 23போக்குவரத்துச் சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலனவர்கள் பஸ் சாரதிகள் எனவும் அவர் கூறினார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106