நாடா புயலில் சிக்கிய குருநகர் மீனவர் சடலமாக மீட்பு!

Saturday, December 3rd, 2016

கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவரின் சடலம் குருநகர் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநகர் இறால் வளர்ப்புத் திட்டப் பகுதியை சேர்ந்த ஆர்.ஜெகன் (வயது 31) என்ற நபரே சடலமாக கரையொதுங்கியுள்ளார்.நேற்று முன்தினம் குருநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற போது, ஏற்பட்ட நாடா புயலின்போது போது ஏற்பட்ட சுழியில் சிக்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடா சூறாவளி தாக்கிய சமயம் குருநகர் பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தனர்.அவர்களில் ஒருவரின் சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது.ஏனைய இருவரில் ஒருவர் உடைந்த படிகில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து மற்றைய மீனவரையும் தேடும் பணிகள் தொடர்ந்து வருகின்றது.இன்று கடலிற்கு சென்ற மீனவர்கள் சடலத்தினைக் கண்டு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதன் பிரகாரம் உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.சடலம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

625.0.560.320.160.600.053.800.668.160.90



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106