நுவரெலியாவாக மாறிய யாழ்ப்பாணம்.!

Friday, December 2nd, 2016

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல இடங்களிலும் மழை அதிகமாக பெய்துவருகின்றது. இதனால் யாழ். மக்களை ஆட்டிப் படைக்கும் கடும் குளிரால் நுவரெலியாவாக யாழ்ப்பாணம் மாறியுள்ளது.

நாடா புயலின் தாக்கம் அதிகமாக இருந்தனால் வடக்கின் பெரும் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டில்வெப்பநிலை 19.8 பாகை செல்சியஸ் ஆக உள்ளதாக யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் –

தெற்மேற்கு வங்க கடலில் உருவான ‘நாடா’ சூறாவளி தற்சமயம் காங்கேசன்துறையில் இருந்து வடக்கே 200 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது தமிழகத்தின் வடக்கு பக்கமாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறைஇ திருகோணமலை ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீற்றர் தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகம் வரையில் காணப்படும் அதேவேளை காற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கலாம்.

இதேவேளை ஆழம் கூடிய பகுதிகளில் காற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரையில் இருக்கும் எனவே கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கப்படுகின்றார்கள்.

நேற்று மாலை 16.8 பாகை செல்சியஸ் ஆக காணப்பட்ட குடாநாட்டின் வெப்ப நிலையானது. தற்சமயம் 19.8 பாகை செல்சிஸ் ஆக காணப்படுகின்றது. இதனால் குளிர் அதிகமாக காணப்படும்.

தற்சமயம் காற்று தரையில் 26 கிலோ மீற்றர் வேகத்தில் வீசி வருகின்றது. நேற்று மாலை தொடக்கம் இன்றைய தினம் காலை 8.30 மணி வரையில் 35 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதில் பருத்தி த்துறை – வல்லிபுரம் பகுதியில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

25-1451046573-fog6788



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106